
''இரானின் எதிரி நாடுடன் இணைந்து இஸ்லாத்துக்கும், இரானுக்கும் அவப்பெயரை உண்டுபண்ணினார், இரான் மறுமலர்ச்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்''
இரான் வலைப்பதிவின் தந்தை என்றழைக்கப்பட்ட ஹோசேன்னுக்கு இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த ப...ெரும் அடி என பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்லாத்தின் பெயாராலும், பிற்போக்குத்தனத்தை ஊக்குவிக்கும் இரானின் இந்த முடிவுக்கு வலைபதிவர்களான நாமும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஹோசேனை உடனடியாக விடுதலை செய்யும்படியும், கருத்து சுதந்தரத்தை இரான் மதிக்க வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறோம்.
இரானில் ஒன்பது இணைய ஊடகவியலாளர்களையும், 27 பத்திரிக்கையாளர்களையும் இரான் சிறைப்பிடித்து வைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.