Saturday, September 25, 2010

இதுவல்லவா மதம் : பிரபல வலைபதிவருக்கு மரண தண்டனை

ஒட்டாவா (கனடா) : கனடாவில் பிறந்த இரான் வம்சாவழி வலைப்பதிவருக்கு இரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இம்முடிவு பெரும் அதிர்ச்சியை உலகெங்கும் எழுப்பியுள்ளது. ஹோசேன் தேறேக்ஷான் (Hossein Derakhshan) என்னும் வலைப்பதிவர் ஈரான் மற்றும் ஈரான் அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களை வலைபதிவில் எழுதி வந்தவர். அவர் கடந்த 2008-ம் ஆண்டு இரான் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், ''இரானின் எதிரி நாடுடன் இணைந்து இஸ்லாத்துக்கும், இரானுக்கும் அவப்பெயரை உண்டு பண்ணினார், இரான் மறுமலர்ச்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்'' என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இரான் உச்ச நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
‎''இரானின் எதிரி நாடுடன் இணைந்து இஸ்லாத்துக்கும், இரானுக்கும் அவப்பெயரை உண்டுபண்ணினார், இரான் மறுமலர்ச்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்''

இரான் வலைப்பதிவின் தந்தை என்றழைக்கப்பட்ட ஹோசேன்னுக்கு இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த ப...ெரும் அடி என பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்லாத்தின் பெயாராலும், பிற்போக்குத்தனத்தை ஊக்குவிக்கும் இரானின் இந்த முடிவுக்கு வலைபதிவர்களான நாமும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஹோசேனை உடனடியாக விடுதலை செய்யும்படியும், கருத்து சுதந்தரத்தை இரான் மதிக்க வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறோம்.
இரானில் ஒன்பது இணைய ஊடகவியலாளர்களையும், 27 பத்திரிக்கையாளர்களையும் இரான் சிறைப்பிடித்து வைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment